--- --:--:-- --

அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சென்ற இளைஞருக்கு அபராதம்…!

2

கேரளாவில் அரசு பேருந்துக்கு வழிவிடாமல் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை பைக்கில் சாகசம் காட்டிய இளைஞர் ஒருவருக்கு வீடு தேடி வந்து 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

 

கர்னூலில் இருந்து சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன்னால் சென்ற இளைஞர் ஒதுங்கிப் போகாமல் வழியும் விடாமல் வெகுநேரமாக பேருந்துக்கு முன்னே சென்றார். பேருந்து ஓட்டுனர் ஹார்ன் அடித்தும் கண்டுகொள்ளாத இளைஞர் விட்டபடி வளைந்து வளைந்து பைக் ஓட்டி சாகசம் நடத்தினார்.

 

இந்த வீடியோ வைரல் ஆகிய நிலையில் அதிகாரிகள் இளைஞரை தேடி கண்டுபிடித்து நேரடியாகவே வீட்டிற்கு சென்று ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் வாகனம் ஓட்டியது, தலைக்கவசம் அணியாது போக்குவரத்திற்கு இடையூறு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அபராதம் விதித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon