பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து கல்லூரி மாணவி தற்கொலை..!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சோலடாமட்டம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மோனிகா கோவையில் வேலை தேடி வந்தவர்.
தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளார். இவரது பெற்றோர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த மோனிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.






