--- --:--:-- --

காதலனும், காதலியும் வீட்டை விட்டு வெளியேறியதால் நடந்த விபரீதம்..!

8

சென்னையில் உறவினர் வீட்டில் சூறையாடியதோடு பட்டாக் கத்திகள் உடன் கொலை மிரட்டல் விடுத்த பகுதியில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

புரசைவாக்கம் பொன்னன் தெருவை சேர்ந்த 19 வயது மகள் ஆர் கே புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் சக்திவேல் என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில் அவருடன் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

இது தொடர்பாக வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இளம்பெண் தரப்பை சேர்ந்த சிலர் ஆர் கே புரம் பகுதிக்கு சென்று சக்திவேலின் நெருங்கிய உறவினர் ஒருவரது வீட்டை சூறையாடிய தோடு தப்பி ஓடினர் .

 

இது பற்றி மற்றொரு வழக்கு பதிவு செய்த வேப்பேரி காவல் நிலைய போலீஸார் அரசு மருத்துவமனை ஊழியர் தினேஷ்குமார், கார் ஓட்டுநர் பிரபாகரன் சத்தியமூர்த்தி உட்பட 7 பேரை கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon