--- --:--:-- --

“தமிழகத்தில் அக். 31 வரை மேலும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு” பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பு இல்லை!!

14

மிழகத்தில் மேலும் புதிய தளர்வுகளுடன் அக்டோபர் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா பரவலை தடுக்க கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா? என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும், மாலையல் மருத்துவ நிபுணர் குழுவினருடனும் ஆலோசனை நடத்தினார்.

 

இதைத் தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு.

 

திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி .

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்க்கான தடை தொடரும்.

 

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது.

 

கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்.

 

அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு .

 

உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி .

 

உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி .

சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி .

 

புறநகர் மின்சார ரயில்கள் போக்குவரத்திற்கு இந்த ஊரடங்கு தளர்விலும் தடை நீக்கப்படவில்லை என்ற அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon