--- --:--:-- --

செங்கல்பட்டில் காவலரை வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்..!

12

செங்கல்பட்டு மாவட்டத்தில் காவலரை பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்த மர்ம கும்பலை 2 தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். காவலராக பணியாற்றி வந்த இன்பரசன் என்பவனின் செல்போனில் இன்று காலை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் பழைய சீவரம் பெருமாள் கோவில் அருகே வருமாறு கூறியுள்ளனர்.

 

இதனால் அங்கு சென்ற இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பழையசீவரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் மகன் ராஜனுக்கும், இன்பரசனுக்கும் இடையே ஏற்கனவே தகராறு நடந்து முன்விரோதம் இருந்ததாக கூறப்படும் நிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon