மேட்டுப்பாளையம் : பில்லூர் அணை நிரம்பியது.அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்! பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து பில்லூர் அணை உள்ளது.கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக உள்ளது.
இந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாவடத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.இதனால் பில்லூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போது 97 அடியை எட்டியுள்ளது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரிநீர் பவானியாற்றில் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சிறுமுகை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகத்தால் விடுக்கப்பட்டுள்ளது.மேலும்,ஆற்றில் குளிக்கவோ,துணி துவைக்கவோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







