--- --:--:-- --

மகளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் தந்தை தற்கொலை..!

11

காஞ்சிபுரத்தில் மகளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத வேதனையால் நெசவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வீதியை சேர்ந்த தொழிலாளி சங்கர் கொரோனாவால் வருமானம் இல்லாமல் தவித்தார்.

 

குடும்ப செலவுக்கு கூட பணம் கொடுக்காத அவர் தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் தனது மகள் மீனாட்சியின் கல்வி கட்டணமாக 7,500 ரூபாய் செலுத்த முடியாத மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon