ஈரக்கையால் சுவிட்சை ஆன் செய்ததால் மின்சாரம் தாக்கி சிறுமி பலி..!
ராணிப்பேட்டை மாவட்டம் மேல் பந்தலில் வீட்டை கழுவி சுத்தம் செய்த போது டேபிள் பேனில் உள்ள சுவிட்சை போட முயன்ற சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேல்பந்தலை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது 16 வயது மகள் அஸ்வினி இன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது ஈரமான கையுடன் டேபிள் பேனில் உள்ள சுவிட்சை ஆன் செய்ய முயன்றுள்ளார்.
இதனால் மின்சாரம் தாக்கியதில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிகழ்வு குறித்து வாழைப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






