முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் 40 நிமிடம் நடைபெற்ற ஆலோசனை..!
அதிமுக உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் சில அமைச்சர்கள் முதலமைச்சர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். அமைச்சர் தங்கமணி, வேலுமணி, ஆர் வி உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
சுமார் நாற்பது நிமிடங்கள் இந்த ஆலோசனை நீடித்தது. உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் முதலமைச்சர் வீட்டில் அமைச்சர்கள் மேற்கொண்ட ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.






