ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கொரொனா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடக்கம்..!
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கொரொனா தடுப்பூசி பரிசோதனையை இந்தியாவில் மீண்டும் தொடங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து புனேவின் சீரம் இன்ஸ்டியூட் இந்த பரிசோதனைகளை மீண்டும் தொடங்க உள்ளது.
முன்னதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் ஏற்பட்டதால் அதன் மீதான சோதனைகள் சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அதே மருந்தின் மீதான பரிசோதனைகளை இந்தியாவில் மேற்கொண்டு வரும் சீரம் இன்ஸ்டிடியூட்டில் சோதனைகளை நிறுத்தி வந்தது.
தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அந்த பரிசோதனைகள் உரிய அனுமதியுடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சீரம் இன்ஸ்டிடுயூட் பரிசோதனைகளை தொடங்க அனுமதி கிடைத்துள்ளது. கோவி ஷீல்டு என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடுயூட் தயாரிக்கும் தடுப்பூசி சென்னையில் இரு மருத்துவமனைகளில் சோதிக்கப்படுகிறது.







