தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை..! விவசாயிகள் மகழ்ச்சி..!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகங்கையிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.
மதுரையில் அண்ணாநகர், கோரிப்பாளையம், தல்லாகுளம், சிம்மக்கல், தெப்பக்குளம், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. திருப்பரங்குன்றம் சுற்றுப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. புதூரில் பெய்த மழையால் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தின் முன் தண்ணீர் தேங்கியதால் அங்குள்ள மக்கள் சிரமம் அடைந்தனர்.
சிவகங்கையிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குளுமையான சூழல் நிலவியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்தது.
புதுக்கோட்டை நகரம் திருவரங்குளம், திருக்கட்டளை, வம்பன், கோவிலூர், ஆலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிவதோடு மானாவரி சாகுபடியை தொடங்கியிருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் மேட்டூர் சுற்றுப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேச்சேரி ,கொளத்தூர், நங்கவள்ளி, ஜலகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த சாரல் மழையால் குளுமையான சூழல் நிலவியது.







