இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை வீட்டிலிருந்து எழுத சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவு..!
சென்னை பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு ஒன்றரை மணிநேர இணையவழி தேர்வாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அறிவுரைகளையும் சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி மாணவர்கள் தேர்வு எழுதும் போது அவர்களுக்கு அனுப்பபட்டிருக்கும் இணைய இணைப்புக்குள் சென்று பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு லாகின் செய்யவேண்டும். தேர்வுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக மாணவர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அந்த கேள்விகளுக்கு 18 ஏ4 தாள்களுக்குள் விடையளிக்க வேண்டும். முடிந்த பின்னர் அந்தத் தாள்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் வேண்டும். பதிவேற்ற இயலாத மாணவர்கள் தேர்வு முடிந்த மூன்று மணி நேரத்திற்குள் விரைவு தபால் மூலம் கல்லூரிக்கு விடைத்தாள்களை அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு மாணவருக்கும் அனுப்பப்படும் பொறுப்பு அதிகாரியின் கைபேசியி எண்ணுக்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
வினாத்தாளை பதிவிறக்கம் செய்யவும் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்ய இணைய வசதிகள் இல்லாத மாணவர்கள் கல்லூரிக்கு தெரியப்படுத்தி கல்லூரிக்குள்ளேயே ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.







