பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதற்கு முன்பாக அரசு அனுமதியை பெற வேண்டும்..!
பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதற்கு முன்பாக அரசு அனுமதியை பெற வேண்டும் என பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா கடிதம் அனுப்பியுள்ளார். கொரொனா பரவல் காரணமாக தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் தவிர்த்து பிற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
முந்தைய செமஸ்டெர்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஒரு மணி நேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அனைத்து பல்கலைக்கழக பதிவாளர் களுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா எழுதியிருக்கும் கடிதத்தில் தேர்வை நடத்துவதற்கு முன்பதாக அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இறுதி செமஸ்டர் தேர்வு தேதிகளை தமிழக பல்கலைக்கழகங்கள் அறிவித்து வரும் நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் இந்த கடிதம் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.







