மதுரையில் எட்டாம் நூற்றாண்டு விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது..!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உலகாணி கிராமத்தில் உள்ள குன்றில் எட்டாம் நூற்றாண்டு விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது. உலகாணி கிராமத்தில் உள்ள குன்று பகுதியில் சிலை போன்ற அமைப்பு இருப்பதாக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் அங்கு சென்று தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.
நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கும் விஷ்ணு சிலையில் வலது கையில் சக்கரமும் இடது கையில் சங்கு உள்ளது.கீழ் வலது கையில் வலது முத்திரையும் இடது கையில் கடி முத்திரையும் உள்ளது.







