--- --:--:-- --

நாடு முழுவதும் திட்டமிட்டபடி நாளை நீட் தேர்வு நடைபெறும்..!

1

நாடு முழுவதும் பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திட்டமிட்டபடி நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வு எழுத இந்த ஆண்டு நாடு முழுவதும் 15 லட்சத்து 96 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 

தமிழகத்திலிருந்து மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் தேர்வுக்காக பதிவு செய்துள்ளனர். தனிமனித இடைவெளியுடன் இருக்கைகளை அமைப்பதற்காக வழக்கத்தைவிட தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து வருவதோடு சானிடைசர், நுழைவு அட்டை, அடையாள அட்டை ஆகியவற்றை தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு உடலைத் தொட்டுப் செய்யப்படும் பரிசோதனைகள் இல்லாமல் நீளமான கைப்பிடியுடன் கூடிய மெட்டல் டிடெக்டர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon