--- --:--:-- --

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் இடமளிக்க கூடாது- இந்தியா, அமெரிக்கா கூட்டாக எச்சரிக்கை..!

5

யங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் இடமளிக்க கூடாது என அந்த நாட்டுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளன. பயங்கரவாத தடுப்புக்கான இந்திய அமெரிக்க கூட்டு நடவடிக்கைக் குழுவின் 17ஆவது கூட்டத்தின் முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

மும்பை தாக்குதல் மற்றும் பதான்கோட் விமானப்படைத் தளத் தாக்குதலுக்கு உள்ளிட்டவற்றில் தொடர்புடையவர்களை தண்டிப்பதுடன் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டுமென கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

பயங்கரவாத தடுப்புக்கான தகவல்களை பகிர்வது பயங்கரவாதத்திற்கு நிதி செல்வதை தடுக்கும் பணியை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்தும் இரு தரப்பும் பேசியிருப்பதாக கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Right Menu Icon