அர்ச்சகரை கொலை செய்துவிட்டு உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்..!
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் கோவிலில் தூங்கிக்கொண்டிருந்த அர்ச்சகர்கள் மூவரை கொலை செய்துவிட்டு உண்டியலை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். மாண்டியாவில் உள்ள ஸ்ரீஅரகேஸ்வரர் கோவிலில் கணேஷ், பிரகாஷ், ஆனந்த் ஆகியோர் பூசாரிகளாக பணியாற்றி வந்தனர்.
முற்றத்திலேயே படுத்து உறங்கிய நிலையில் அங்கு வந்த கொள்ளையர்கள் மூவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு உண்டியலை திருடி சென்று அருகில் உள்ள பகுதியில் வைத்து உடைத்து பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
கொலை கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.







