சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை..!
இந்தியா – சீனா இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்கேவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சரை மூன்று முறை சந்திக்க உள்ளார்.
இன்று மாலை நடைபெறவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் எல்லை பிரச்சினை குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்க உள்ளார்.







