--- --:--:-- --

மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாட வேண்டாம்..!

5.1

மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாட வேண்டாம் என்று அதிமுக அரசை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் எதை செய்தாலும் அவசர அவசரமாக செய்து சம்பந்தப்பட்டவர்களை கடும் பாதிப்பிற்கு ஆளாகி வரும் எடப்பாடி பழனிசாமி அரசு தற்போது கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனிலும் அதே அவசர விளையாட்டை ஆடி கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.

 

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் முந்தைய தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி என்கிற அறிவிப்பு வியப்பளிப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பபாவுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி இருப்பதை ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இந்த கடிதம் மாணவர்களின் எதிர்காலம் குறித்து அதிர்ச்சியையும் கவலையையும் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்க அதிமுக அரசின் கபட நாடகம் ஆடுகின்ற கேள்வி பெற்றோர் மனதில் எழுந்து இருப்பதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon