--- --:--:-- --

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உரிய உரிமம் இல்லாமல் விற்கப்படுவதாக மனு..!

4

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இரு
மருந்துகள் உரிய உரிமம் இல்லாமல் இந்தியாவில் விற்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

பெவிபிரவீர் மற்றும் ரெம்டெசிவர் ஆகிய இரு மருந்துகளை 10 நிறுவனங்கள் இந்தியாவில் தயாரித்து விற்பதாக பொதுநல மனுவில் கூறியுள்ள வழக்கறிஞரின் ஷர்மா உரிமை பெறாமல் இருப்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மேலும் இந்த இரு மருந்துகளும் கொரொனா சிகிச்சைக்காக என்று கூறி எந்த நாடும் சான்று வழங்க வில்லை என்பதையும் வழக்கறிஞர் ஷர்மா தன் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். கொரொனா சிகிச்சைக்கு பலன் தருமா என்ற பரிசோதனையில் இருக்கும் மருந்துகளை எப்படி அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

உயிர் பீதியில் இருக்கும் மக்களுக்கு மிக அதிக விலையில் இந்த மருந்துகள் விற்கப்படுவதாகவும் அவர் தன் மனுவில் கூறியுள்ளார். ரெம்டெசிவர் மருந்து, எபோலா வைரஸ் சிகிச்சைக்காகவும் பெவிபிரவீர் மருந்து இன்ஃபுளுயென்சா சிகிச்சைக்காகவும் உருவாக்கப்பட்டவை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon