போலி ஆவணங்கள் தயாரித்து ஊராட்சி நிதியை கையாடல் செய்த இருவர் கைது..!
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே போலி ஆவணங்கள் தயாரித்து ஊராட்சி நிதியை கையாடல் செய்ததாக ஊராட்சி செயலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
மஞ்சவாடி ஊராட்சி செயலர் கருணாகரன் அதிகாரிகளின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ஊராட்சி நிதியில் இருந்து 20 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்ததாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் குமார் என்பவர் தான் இணைந்து நிதி முறைகேட்டில் கருணாகரன் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கருணாகரன், குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் அதிகாரிகளின் பெயரில் பயன்படுத்திய போலி முத்திரைகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.






