--- --:--:-- --

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5976 பேருக்கு பாதிப்பு…! உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக குறைந்தது!!

13

தமிழகத்தில் இன்று 5976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் உயிரிழப்பு கணிசமாக குறைந்து 74 ஆக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா நிலவரம் தொடர்ந்து ஒரே சீராகவே உள்ளது. இன்றைய நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,976-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4, 51,827-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 74 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7,687 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வருவதும் குறிப்பிபத்தக்கது.

 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 6,334-பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 83,699- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 51,30,741 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 51,633-ஆக உள்ளது.

 

சென்னையில் இன்று ஒரே நாளில் 992-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 2-வது நாளாக எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon