--- --:--:-- --

நீட் மற்றும் ஜெஇ‌இ தேர்வுகளை தள்ளிவைக்க கோரிய மனு தொடர்பாக இன்று விசாரணை..!

4

கொரோனா காரணமாக நீட் மற்றும் ஜெஇ‌இ தேர்வுகளை தள்ளிவைக்க கோரி 6 மாநில அமைச்சர்கள் தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.

 

நீட், ஜெ‌இ‌இ தேர்வுகளை தள்ளிவைக்க கோரிக்கை மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் பாஜக ஆட்சியில் இல்லாத 6 மாநில அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநில வரிகள் மற்றும் புதுச்சேரி எம்எல்ஏ அனந்தராமன் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் பெருந்தொற்று காலத்தில் தேர்வுகளை நடத்துவது பெரும் சுகாதாரப் பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்றும் பல்வேறு காரணங்களால் மாணவர்களால் தேர்வில் பங்கேற்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அதை மாணவர்களிடையே சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தி விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon