--- --:--:-- --

சந்திரயான் 3 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள லேண்டர் கருவி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது..!

9

ந்திரயான் 3 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள லேண்டர் கருவியை சோதிக்க நிலவில் உள்ளது போன்ற பள்ளங்களை செயற்கையாக உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள லேண்டர் கருவிக்கான சோதனைகளில் நிலவில் உள்ள பள்ளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 

எனவே லேண்டரை விண்ணில் ஏவுவதற்கு முன்பாக அதனை கடும் சோதனைக்கு உட்படுத்த இஸ்ரோ முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள உள்ளார்தி காவலூ என்ற இடத்தில் நிலவில் உள்ளது போன்று செயற்கை பள்ளங்கள் அமைக்கப்பட உள்ளன.

 

10 மீட்டர் விட்டம், 3 மீட்டர் ஆழத்தில் செயற்கை நிலவு பள்ளங்கள் உருவாக்கப்பட்டு லேண்டரை சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நிலவில் மென்மையாக தரை இறங்குவதற்கான லேண்டரில் உள்ள சென்சார்கள் இயங்கி வருவது குறித்து இங்கு ஆய்வு செய்யப்பட உள்ளது.

 

நிலவில் பல மர்மங்களை உள்ளடக்கிய தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அடுத்த ஆண்டு சந்திரயான் 3 விண்கலத்தைச் செலுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon