--- --:--:-- --

உயிரிழந்த மாணவியின் உடல் எரியூட்டப்படும் போது காதலன் தீயில் பாய்ந்து உயிரிழப்பா?

11.1

ற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடல் எரியூட்டப்பட்ட மயான கொட்டகையில் கூடுதலாக மனித எலும்புகள் கருகிய நிலையில் கைக்கடிகாரம் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் மகன் நர்சிங் மாணவி நித்யஸ்ரீ நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

மேலும் வீட்டில் ஒரே ஸ்மார்ட்போன் மற்றும் இருப்பதாக கூறப்படும் நிலையில் மாணவிக்கும் அவரது இரு சகோதரிகளுக்கும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில் ஏற்பட்ட பிரச்சனையை இதற்கு காரணம் என உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

இதனையடுத்து அந்த கிராமத்தில் உள்ள இடுகாட்டில் மாணவியின் உடல் எரியூட்டப்பட்டது. ஆனால், மாணவியர் இடைப்பட்ட இடத்தில் கூடுதல் மனித எலும்புகள், கைக்கடிகாரம், செல்போன் உதிரிபாகங்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

எலும்புகளை தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இதனிடையே மேட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் தனது மகன் ராமுவை காணவில்லை என அண்மையில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 

இளைஞர் ராமு தற்கொலை செய்துகொண்ட மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இடுகாட்டு பகுதியில் ராமு சுற்றித் திரிந்ததாகவும் அனைவரும் சென்ற பின்னர் இரவில் இளைஞர் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாகவும் அப்பகுதியினர் கூறுவதாக விசாரணை நடத்திய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

எனவே ஒருதலை காதலாக இருந்தாலும் இளம்பெண் இறப்பை ஏற்க முடியாமல் மாணவி உடல் எரிந்து கொண்டிருக்கும் போதே அதில் பாய்ந்து இளைஞர் ராமு உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மாணவியின் வீட்டில் நான்கு ஸ்மார்ட் போன்கள் இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

 

முழுமையான விசாரணைக்கு பின்னரே மயான கொட்டகையில் கருகியது யார் என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்கள் தெரியவரும் என்கின்றனர் காவல்துறையினர்.

Leave a Reply

Right Menu Icon