--- --:--:-- --

இந்தியா – சீனா இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம்…!

12

ந்தியா – சீனா இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் மூன்றாவது நாளாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. கடந்த வாரம் பாங்காக் ஏரியின் கரைப் பகுதியில் சீன ராணுவம் நள்ளிரவில் அத்துமீற முயன்றதை இந்திய வீரர்கள் சரியான சமயத்தில் கண்டறிந்து தடுத்தனர்.

 

தற்காப்பு முயற்சியாக இந்திய ராணுவமும் அந்த பகுதியில் பீரங்கிகள் யுத்த ஆயுதங்களை குவித்து வீரர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தியுள்ளது. லடாக் மலை பகுதிகளில் குளிர் அதிகரிக்க தொடங்கி விட்டாலும் சீனாவின் அத்துமீறலால் அந்த பகுதியில் இந்திய வீரர்கள் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர்.

 

இந்நிலையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்திய – சீன அதிகாரிகள் மட்டத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து இன்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon