--- --:--:-- --

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்..!

14

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக பெங்களூருவில் கைதான போதை மருந்து விற்பனை கும்பலுக்கும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் தினேஷ், ஸ்வப்னா ஆகியோருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.

 

கேரளா தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பாலகிருஷ்ணனின் மகனும், திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகரும் பிணேஷ் கொடியேறியின் மொபைல் எண், போதை மருந்து கும்பலிடம் இருப்பது தெரியவந்து உள்ளது.

 

குறிப்பாக போதை மருந்து கும்பலின் தலைவனான முகமதுக்கும், பினுஷுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும் முகமது பெங்களூரில் உணவகம் தொடங்க பினிஷ் லட்சக்கணக்கில் பண உதவி செய்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

முகமது பினிசுடன் மாநிலத்தின் பல்வேறு நட்சத்திர விடுதிகளில் தங்கியதும் நடன நிகழ்ச்சிகள், மதுபானம் போதை விருந்தில் பங்கேற்றது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon