கோவை அருகே வாயில் காயம்பட்ட மக்னா யானைக்கு மருந்து கலந்த உணவு கொடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு !!!
கோவை மாவட்டம் மருதமலை அருகே வனப்பகுதியில் ஒரு மக்னா யானை வாயில் காயத்துடன் இருப்பது தெரியவந்தது. தமிழ்நாடு மற்றும் கேரளா வனப்பகுதிகளில் அந்த யானை மாறிமாறி இடம் பெயர்ந்து வந்ததால் சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து கேரள வனப்பகுதியில் பிடிபட்ட மக்னா யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் மீண்டும் தமிழக வனப்பகுதிக்குள் யானை வந்ததை அடுத்து கோவை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும்,மருந்து கலந்த உணவை யானைக்கு வைக்கின்றனர். அந்த உணவை யானை எடுத்துக் கொள்கிறது. இதனிடையே நேற்றிரவு சின்னத்தடாகம் பகுதியில் அந்த யானை சுற்றித் திரிந்தது. அப்போது, 3 குடிசைகளை சேதப்படுத்தியுள்ளது. இதனால் சின்னத்தடாகம் பகுதியில் உள்ள பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.







