--- --:--:-- --

கோவையில் மு.க.அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.மாநகர் திமுகவில் உட்கட்சி பூசலா ? தொண்டர்கள் அதிர்ச்சி!!!

11.2

முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உயிருடன் இருக்கும் காலகட்டங்களில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மகன் மு.க.அழகிரியின் கை ஓங்கி இருந்தது.மு.க.ஸ்டாலினின் வருகைக்கு பின்னர் மு.க.அழகிரி சற்று அடக்கி வாச உத்தரவிடப்பட்டார். ஒருகாலகட்டங்களில் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தலால் மு.க.அழகிரி கட்சியில் இருந்தும் பதவியில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டார்.

 

இந்நிலையில் திமுக முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலாளரும்,மு.கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரிக்கு ஆதரவாக கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் உட்கட்சி பூசல் மீண்டும் தலை தூக்கும் வகையில் உள்ளது.

 

மு.க.அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரிக்கு அஞ்சாநெஞ்சனே நேரம் நெருங்கிவிட்டது‌. உண்மை தொண்டன் வெற்றியை உறுதி செய்ய வாரீர்.கழக ஆட்சி என்றும் கலைஞர் ஆட்சி அமையட்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் கோவை ரயில் நிலையம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன.

 

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவார் என்று அனைவரும் எண்ணி கொண்டிருக்கும் நிலையில் மு.க.அழகிரிக்கு வெற்றியை உறுதி செய்ய வாரீர் என்ற வாசகங்களுடன் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது திமுகவினர் இடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon