நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து மலிங்கா விலகினார்..!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர் லசித் மலிங்கா விளக்கியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அணியிலிருந்து விலகி இருப்பதாக மும்பை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மலிங்காவுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் பேட்டின்சன் மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பல்வேறு போட்டிகளில் மும்பை அணிக்கு வெற்றிகளை வசமாக்கிக் கொண்ட மலிங்கா இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.







