--- --:--:-- --

பாதாள சாக்கடயை சுத்தம் செய்ய மாணவிகள் கண்டுபிடித்துள்ள புதிய எந்திரம்..!

5.1

பாதாள சாக்கடையை சுத்தப்படுத்தும் போது விஷ வாயுவால் ஏற்படும் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பை தடுக்க கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

 

நான்காம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் பயிலும் மாணவிகள் ஆன அக்ஷயா, ரஞ்சிதா, மற்றும் சிவரஞ்சனி ஆகியோர் இணைந்து இந்த புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளனர்.

 

இதன் உதவிகொண்டு துப்புரவு பணியாளர்கள் எதிர்பாரதவிதமாக விஷ வாயு தாக்குதலுக்கு உள்ளாகும் போது உயிர்ச்சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன் அருகிலுள்ள ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதார நிலையத்திற்கு தகவல் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாணவிகள் கூறினார்.

 

இந்த கருவியை கும்பகோணம் நகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன் மற்றும் நகராட்சி அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

 

Leave a Reply

Right Menu Icon