மதுரையில் சாதியை இழிவுபடுத்தி தாக்கிய 2 இளைஞர்கள் கைது..!
மதுரையில் பொதுவெளியில் ஒரு குடும்பத்தை சாதி ரீதியாக இழிவுபடுத்தி தாக்கியதாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதிச்சியம் ராமராயர் மண்டபத்தை சேர்ந்த முத்து பாண்டி என்ற இளைஞர் தனது தாய் மற்றும் சகோதரி உடன் கடை ஒன்றிற்கு சென்று இருந்தார்.
அப்போது கடைவாசலில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முத்து பாண்டி, கதிரேசன் ஆகிய 2 பேர் கடைக்கு வந்த முத்து பாண்டியை சாதிரீதியாக இழிவாகப் பேசியுள்ளனர். இதனை தாய் மற்றும் சகோதரி தட்டிக் கேட்கவே அந்த இளைஞர்கள் அந்த பெண்கள் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
சகோதரர் முத்து பாண்டியையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் இரண்டு பேரும் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரிந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.







