--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 5,990 பேருக்கு கொரோனா பாதிப்பு..! உயிரிழந்தோர் 98 பேர்!!

14

மிழகத்தில் இன்று 5990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 5,891 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்றைய உயிரிழப்பும் 98 ஆக பதிவாகியுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வந்தாலும் பாதிப்பு குறைந்த பாடில்லை. தினசரி பாதிப்பு 6 ஆயிரத்த்ற்குள்ளும், உயிரிழப்பு 100 என்ற அளவிலுமே தினசரி பதிவாகி வருகிறது.

 

இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,959 ஆக அதிகரித்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று 98 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,516 ஆக அதிகரித்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று 5,891 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.80,063 லட்சமாக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் இன்று 75,829 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 49,64,141 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

 

சென்னையில் இன்று 1,025 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon