--- --:--:-- --

அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கூடாது..!

12

ரசு பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கூடாது என உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி பட தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் பதவி உயர்வு இட ஒதுக்கீடு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்ற மாநில அரசின் சட்ட பிரிவுகளை சென்னை உயர்நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்திருந்தது.

 

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

அதை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது. அதேவேளையில் 8 வாரத்தில் தனது தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்ற தவறிய தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஎன்பிஎஸ்சி செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர் மனுதாரர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

 

அவற்றின் மீது 6 வாரத்தில் பதிலளிக்க தலைமை செயலாளர் மற்றும் டிஎன்பிஎஸ்சி செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon