--- --:--:-- --

சீனாவுக்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் அணியாக திரள்கின்றனர்..!

10

சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் அணி திரள்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ கூறியுள்ளார். சீனாவின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து இருப்பதாக மைக் பாம்பியோ கூறியிருக்கிறார்.

 

முன்னதாக எல்லை பிரச்சினைகளை தனக்கு சாதகமாக சீனா இரட்டை போக்கை கையாள்வதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் அத்து மீறல்கள் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

 

அது எல்லை பிரச்சினைகளை சாதகமாக்கிக் கொள்ள சீனா மிரட்டல் போக்கை கையாளுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்சீன கடல் விவகாரம் மற்றும் இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைகளில் சீனா தொடர்ந்து கூறிவரும் நிலையில் அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon