கல்லூரி இறுதி பருவத்தேர்வு இந்த மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும்..!
தமிழகத்தில் கல்லூரி இறுதி பருவத்தேர்வு இந்த மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதி பருவ தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு பின் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் இறுதி பருவத் தேர்வில் மாணவர்கள் நேரில் வந்து எழுதக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். எனவே மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேபி அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் கட்டமைப்பியல் இளநிலைப் பட்டப் படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பத்தை செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் இதில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் அன்றைய தேதி முதல் www.tneaonline. org என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.






