--- --:--:-- --

ஹீட்டரில் கை வைத்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

1

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வாட்டர் ஹீட்டரில் கை வைத்த குழந்தை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. மேல்பல்லிபட்டு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் பவித்ரா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை அனன்யா. பவித்ரா சமையல் அறையில் எவர்சில்வர் குடத்தில் ஹீட்டர் மூலம் தண்ணீரை சூடு செய்யும் போது மின்சாரம் கசிந்து உள்ளது என்பதை அறியாமல் பவித்ரா சமையல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

 

அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மின்சாரம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. பொருட்களை முறையாகப் பராமரித்து எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்பதை அலட்சியப்படுத்தினால் இது போன்ற ஆபத்துகள் தொடர்கதை ஆகி விட்டன.

Leave a Reply

Right Menu Icon