தமிழகம் முழுவதும் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது..!
தமிழகம் முழுவதும் 21 இடங்களில் சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 525 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 21 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு 12 மணிமுதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு, கரூர் மாவட்டம் வேலன் செட்டியூர், மணவாசி, தர்மபுரி மாவட்ட பாளையம், விருதுநகர் மாவட்டம் புதூர் பாண்டியாபுரம், மதுரை மாவட்டம் எலியார்பத்தி, நாமக்கல் மாவட்டம் ராஜபாளையம், விசயமங்கலம், சேலம் மாவட்டம் ஓமலூர், மேட்டுப்பட்டி, நதகரை, வைகுண்டம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
திருச்சி மாவட்டம் சமயபுரம், திருப்ப ராயபுரம், பொண்ணம்பலபட்டி, தஞ்சை மாவட்ட வாழவந்தான் கோட்டை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி, வீரசோழபுரம், பெரம்பலூர் மாவட்டம் திருமந்துறை ஆகிய இடங்களில் உள்ள சுங்கச் சாவடிகளிலும் புதிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுங்கச்சாவடிகளில் கூடுதலாக ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.







