தர்பூசணி பழத்தில் மகாபலி மன்னனின் உருவத்தை செதுக்கிய நபர்..!
ஓணம் பண்டிகையை உலகெங்கும் உள்ள மலையாளிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தேனி அருகே உள்ள கூடலூரை சேர்ந்த இளைஞர் தர்பூசணி பழத்தில் மகாபலி மன்னனின் உருவத்தை நுணுக்கமாக செதுக்கி வியப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் கூடலூரை சேர்ந்த இளஞ்செழியன் என்ற இளைஞர் தர்பூசணி பழத்தின் தோலை நீக்கி மகாபலி மன்னனின் உருவத்தை தத்ரூபமாக வரைந்தார். விநாயகர் சதுர்த்தியின் போது இவர் பனிக்கட்டியில் விநாயகர் சிலையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.







