இராமநாதபுரம் வாலிநோக்கம் கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கிய திமிங்கலம்..!
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலி நோக்கத்தில் இன்று காலை 6 மணியளவில் திமிங்கிலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.
இப்பகுதி மீனவ மக்கள் கூறியதாவது இந்த திமிங்கிலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது.
திமிங்கிலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன. இவை வெப்ப இரத்த விலங்குகள். திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன.
உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத் திமிங்கிலம் ஆகும். இது சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடையுள்ளதாகவும் வளரக்கூடியது. நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.







