--- --:--:-- --

ஜிஎஸ்டி கவுன்சில் 41 ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது..!

7

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் 41 ஆவது கூட்டத்தில் ஜி‌எஸ்‌டியை அமல் படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

காணொளி மூலம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்டுவது பற்றி ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பற்றாக்குறையை சமாளிக்க சந்தையில் இருந்து கடன் பெறுவது உள்ளிட்ட வழிமுறைகள் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

 

முன்னதாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநிலங்களின் வருவாய் இழப்பை ஈடுகட்ட மறுக்கும் மத்திய அரசின் போக்கு மக்களுக்கு செய்யப்படும் துரோகம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon