பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் மாலை 4 மணிக்கு வெளியிடப்படும்..!
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை செயலர் வெளியிட்ட அறிக்கையில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் கொண்ட பலரை வரிசைப்படுத்த ரேண்டம் எண் பயன்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் சேர்க்கை குறித்த விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்வானவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியின் இணைய தளம் மூலம் கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
கல்லூரியில் சேரும் நாளில் அசல் சான்றிதழை சமர்ப்பித்து ஒப்புகை பெறலாம். மேலும் வெளி மாவட்டத்தில் உள்ளவர்கள் www.tngasa.in என்ற இணைய முகவரியில் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.






