பிளஸ்-1 மாணவர்கள் பிற்பகல் 3 மணி முதல் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..!
விடைத்தாள் நகலுக்காக விண்ணப்பித்த பிளஸ்-1 மாணவர்கள் பிற்பகல் 3 மணி முதல் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து www.dge.tn.gov. இந்த என்ற இணைய தளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கலாம். மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் அதே இணையதளத்தில் அதற்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதனைப் பூர்த்தி செய்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அருகில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.







