--- --:--:-- --

கொரொனாவிலிருந்து குணமான நபருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதால் அதிர்ச்சி..!

25

கொரொனாலிருந்து குணமான நான்கு மாதங்களில் ஹாங்காங்கை சேர்ந்த இளைஞருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நபரிடம் ஹாங்காங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய மருத்துவ சோதனையில் கொரொனா வைரஸ் சற்று மாறுபட்ட வடிவில் தோற்ற ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா தொற்று வந்து குணமடைந்தவர்களுக்கு வாழ்நாள் நோய் எதிர்ப்புத்திறன் உருவாகாது என்பதை இது காட்டுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தொற்று வந்த போனவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் என்பதுடன் அவர்களும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

 

எந்த அறிகுறியும் இல்லாமல் இரண்டாவது முறையாக கொரொனா தொற்றுக்கு ஆளான நபருக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon