--- --:--:-- --

வாக்கு பதிவு எந்திரங்கள் மீது பழி கூறினால் நடவடிக்கை! சுனில் அரோரா அறிவிப்பு

Pol-Diaries-Feb25-6-770

ஓட்டு பதிவு எந்திரம் குறித்து பொய் புகார் கூறும் வாக்காளரை தண்டிக்கும் விதிமுறை மறுபரிசீலனை செய்யபடும் என்று தலைமை தேர்தல் கமிஷ்னர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.தேர்தலின் போது தங்களது ஓட்டு தவறாக பதிவாகிவிட்டதாக மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் அல்லது ஒப்புகை சீட்டு எந்திரங்கள் மீது புகார் கூறும் வாக்காளர் தேர்தல் நடத்தை விதிகள் 49 எம்.ஏ. பிரிவின் படி சோதனை ஓட்டு போட அனுமதிக்கப்படுவார்.

 

அதில் அவர் கூறியது பொய் என்று கண்டுபிடிக்கப்பட்டால் இந்திய தண்டனை சட்டம் 177வது பிரிவின் கீழ் அவர் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்.சமீபத்திய தேர்தலின் போது தண்டனை விதிமுறை அறிவிக்கபட்டது.அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த நிலையில் இந்த விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படுமென்று தலைமை தேர்தல் கமிஷ்னர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்துவிட்டதால் விதிமுறையை மாற்றி அமைப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக  அவர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon