30 மணி நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்ட காவல் துறையினருக்கு காவல் ஆணையர் சான்றிதழ் வழங்கி பாராட்டு

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்க நகைகள் தயாரித்த நகைக்கடை ஒன்று தனது ஊழியரிடம் கொடுத்து தாராபுரம் கொண்டு செல்லும் பொழுது தங்களது வாகனத்தினால் மோதி விபத்தினை ஏற்படுத்தி 840 கிராம் சுமார் 16 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.இந்த வழக்கில் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்து வந்த காவல் துறையினர் சட்டக்கல்லூரி மாணவி உட்பட நால்வரை அதிரடியாக கைது செய்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை ராம் நகர் ராமர் கோவில் அருகே ராஜ வீதியில் உள்ள BMC ஜீவல்லரியில் பணிபுரியும் ராமமூர்த்தி என்பவர் தனது கடையில் தயாரிக்கப்பட்ட 16 லட்ச ரூபாய் மதிப்புள்ள 840 கிராம் தங்க நகைகளை தாராபுரம் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார். அப்போது,தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த வீரமணி என்பவரது மகன் ராஜா தனது இருசக்கர வாகனத்தில் மோதியதில் ராமமூர்த்தி தனது வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

 

அவரை அப்பகுதியில் இருந்த சிலர் அருகில் இருந்த கடைக்குள் கூட்டிச்சென்று தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்து கொண்டிருந்த பொழுது சில இளைஞர் ராமமூர்த்தியின் நகைகளுடன் இருந்த தோள் பையினை திருடிச்சென்றுள்ளனர்.பொதுமக்கள் விசாரிக்கையில் ராமமூர்த்தியை தனது வாகனத்தில் மோதி கொலை முயற்சி செய்து நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

 

பின்னர்,இச்சம்பவம் குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தும், 3 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்தும் குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.பின்னர்,ராமமூர்த்தி வீட்டில் இருந்து புறப்பட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக சிசிடிவி கேமராக்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்ததில் தனது வாகனத்தில் மோதி போலியாக விபத்தினை ஏற்படுத்திய ராஜாவுடன் சேர்த்து 5 நபர்கள் கொண்ட கொள்ளையர்கள் மூன்று இரு சக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்து ராஜா தனது வாகனத்தில் விபத்தை ஏற்படுத்த மற்றவர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்தது.

 

இவ்வழக்கில் திறம்பட செயலாற்றி குற்றவாளிகள் டேனியல் ,அவரது மனைவி சங்கீதா ( மூன்றாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி ),ராஜா,குமார்,ப்ரித்வி,விஜயகுமார்,பத்ரிநாத் உள்ளிட்டோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 610 கிராம் தங்க நகைகள்,ஒரு கார் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்து பொருட்களை மீட்டனர்.

 

கோவையை உலுக்கிய இச்சம்பவத்தில் கொள்ளை நடந்து 30 மணி நேரத்தில் கொள்ளையில் ஈடுபட்ட நால்வரை கைது செய்து பொருட்களை மீட்ட காவல் துறையினரை இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்து கோவை சிட்டி கமிஷனர் சுமித் சரண் வெகுவாக பாராட்டி சான்றிதழ்களையும்,வெகுமதியினையும் வழங்கினார்.


Leave a Reply