சிறுமியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்த இளைஞர் கைது..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்த இலங்கை அரசு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த வாரத்திலிருந்து காணவில்லை என்று அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் சிறுமியை தேடினர். இந்நிலையில் செங்காடு கிராமத்தை சேர்ந்த அசோக் ராஜ் என்ற இளைஞன் சிறுமியை திருமணம் செய்திருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அசோக்ராஜ் சிறுமியை ஏமாற்றி இரண்டாவதாக திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






