நடத்தப்படாதா வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கும் பள்ளி..!
சென்னை வேப்பேரியில் உள்ள டவுட்டன் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படாத ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கமான பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மற்றும் ப்ரோஜெக்டர் உதவியுடன் நடத்தப்படும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பள்ளி நிர்வாகம் 3 ஆயிரம் ரூபாய் வசூலித்து வந்த நிலையில் தற்போது கொரொனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்று வரும் நிலையில் நடத்தப்படாத ஸ்மார்ட் கிளாசுக்காக 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த சொல்வதாக பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டணத்தை செலுத்தாவிட்டால் டிசியை பெற்றுக் கொண்டு வெளியேறுமாறு பள்ளி நிர்வாகம் தெரிவித்ததால் செய்வதறியாது திகைத்து உள்ள பெற்றோர்கள் வேறு வழியின்றி கலைந்து சென்றனர்.






