--- --:--:-- --

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி உயர்த்தப்பட வாய்ப்பா?

20

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் வரி உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெடுஞ்சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மற்றும் காப்பீடு செய்யப்படாத வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானவர்களின் மருத்துவ உதவிக்காக அந்த வரிப்பணம் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

 

ஆண்டுதோறும் இதுபோன்ற காரணங்களுக்காக அரசுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது என்பதால் இந்த வரி ஏற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி அடையாளம் தெரியாத வாகனங்களால் அடிபடுவோருக்கு இலவச மருத்துவ சேவை மற்றும் இழப்பீடு வழங்க வழி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Right Menu Icon