--- --:--:-- --
19

திருவண்ணாமலையில் வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி அத்துமீறலில் ஈடுபட முயன்ற சாமியாரை கராத்தே கலையை பயன்படுத்தி திருப்பி தாக்கிய ரஷ்ய நாட்டு பெண் பொதுமக்கள் உதவியுடன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

 

கிரிவல பாதையில் உள்ள ருத்ராஜா பகுதியில் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஆஷா என்பவர் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து வசித்து வந்துள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்த சாமியார் மணிகண்டன் அவரை சில நாட்களாக பின் தொடர்ந்த வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்துக்கொண்டு கத்தியை காட்டி சாமியார் மணிகண்டன் அத்து மீறளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கராத்தே கற்ற ஆஷா மணிகண்டனை தாக்கியதோடு சப்தமிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசார் வரவழைத்து அத்துமீறிய சாமியாரை போலீசில் ஒப்படைத்தார்.

Leave a Reply

Right Menu Icon